இன்றைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்து அப்ளிகேஷன்களை ஏன் மாற்ற வேண்டும் அப்படி மாற்றுவதால் என்ன பயன்? ஆண்ட்ராய்ட் போனிலிருந்து SD Card க்கு மாற்றப் பயன்படும் அப்ளிகேஷன் (மென்பொருள்)என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். Android Smartphone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், மென்பொருள்கள், Games Software போன்ற பல்வேறு வகையான மென்பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அள்ளி (Android apps) வழங்கி வரும் தளங்களில் முதன்மை பெற்றது கூகிள் பிளே ஸ்டோர் தளம். மற்றும் ஏனைய தளங்களும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை இலவசம். ஒரு சிலவற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். இதுபோன்ற தளங்களிலிருந்து உங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் டவுன்லோட் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரி குறைவாக இருந்தால் போதிய இடமில்லை என்ற அறிவிப்பு வரும். இதற்கு ஒரே வழி ஏற்கனவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துவதுதான். இயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். அதற்குப் பயன்படும் மென்பொருள் அப்ஸ்2எஸ்டி (AppMgr III App 2 SD). உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. காரணம் இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும். பயன் ஒன்று: ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள் அல்லது அப்ளிகேஷனை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும். நீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம். அதேபோல் மெமரிகார்ட்டில் என்னென்ன ஆப்ளிகேஷன்கள் உள்ளன என்பதை ஆன் எஸ் டி கார்ட் (On SD Card) என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பு: குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை (Phone Only apps) SD Card க்கு நகர்த்த முடியாது. காரணம் அது போன் ஒன்லி ஆப்சனில் (Phone Only) இருக்கும். இவ்வாறு இருக்கும் அப்ளிகேஷன்களை நகர்த்த முயற்சிக்க கூடாது. பயன் இரண்டு: இரண்டாவது முக்கியமான பயன், போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றுவது. உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவீர்கள் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தும்பொழுது தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய் போனில் Cache உருவாகும். பல நூறு முறை நீங்கள் இவ்வாறு பல்வேறு பட்ட அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது கேட்சியானது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் மெமரியை நிறைத்துவிடும். அவ்வாறு நிறையும்பொழுது தானாகவே ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்பாட்டில் வேகம் குறைந்துவிடும். சில சமயம் செயல்படாமல் அப்படியே பாதியில் நின்று விடும். மேலும் புதிய அப்ளிகேஷன்களை நிறுவும்பொழுது மெமரியில் போதிய இடமில்லை என்று செய்தியைக் காட்டும். இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய மென்பொருள்கள், அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் (பேஸ்புக், ட்விட்டர்) போன்றவையே. இது அப்ளிகேஷன் கேட்சிகளை, அப்ளிகேஷன் டேட்டாக்களை (application data) ஏற்படுத்தி மெமரியை நிறைத்துவிடும். இந்த பிரச்னையும் இம்மென்பொருள் எளிமையாக கையாளுகிறது. அதாவது குறிப்பிட்ட அளவில் உங்களுடைய போன் மெமரியில் கேட்சிகள் (Phone Memory Cache)நிறையும்பொழுது தானாகவே அதை நீக்குகிறது. அதாவது ஒரு எம்பிக்கு மேல் கேட்சிகள் நிறையும்பொழுது தானாகவே "There are 1.051 Cache Size used by application. Do you want to clear them for getting more space" என நீக்கவா என்று கேட்கும். ஓ.கே கொடுத்து அந்த கேட்சிகளை நீக்கிவிடுங்கள். இவ்வாறு நீக்கும்பொழுது தேவையில்லாதவைகள் மெமரியிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனின் வேகம் குறையாமல் இருக்கும். மற்ற பயன்கள்: அப்ளிகேஷன்களை மறைப்பது, நண்பர்களுடன் அப்ளிகேஷன்களை பகிரந்துகொள்வது, பேட்ச் அன்இன்ஸ்டால் (Batch Uninstall)செய்வது. மிகச்சிறந்த பயன்களைக் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவிக்கொள்ளலாம். தரவிறக்கம் செய்யச் சுட்டி: Install directly App2 SD நேரடியாக தரவிறக்கம் செய்ய கூகிள் சர்ச் என்ஜினில் Download Free Apps2SD எனத் தேடுங்கள். உங்களுக்கு வேண்டிய மென்பொருள் தரவிறக்கம் செய்ய நிறைய தளங்கள் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இம்மென்பொருளைப் பற்றி தரவிறக்கப் பக்கத்தில் இவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
TN INDIAN
Tamil nadu indian presenting for you all only interesting info.
ஆண்ட்ராய்ட் போனில் அப்ளிகேஷன்களை SD CARD க்கு நகர்த்தப் பயன்படும் மென்பொருள்

அழிக்க முடியாத பைல்களை அழிக்க
அழிக்க முடியாத பைல்களை அழிக்க சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.
01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்
02. எடுத்துக்காட்டாக C டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents and Settings \ mydoc.txt
03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.
04. இனி Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.
05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.
கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது
இந்தபதிவை படித்துக்கொண்டிருக்கும் அனேகமாக பல பேரிடம் ஸ்மார்ட் போன் அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை உங்களுக்கு கொடுக்கிறேன். நம்ம இந்தியாவில் ஏறத்தால அனைத்து வீட்டுகணினிகளும் வின்டோஸில் இயங்கும் மென்பொருட்களை யாரும் பணம் கொடுத்து வாங்குவதாக தெரியவில்லை (என்னது பணமா?!). எல்லாமே மென்பொருட்களையும் பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றால் இந்த அளவிற்க்கு கணினி விற்பனை ஆகியிருக்காது என்று தான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மென்பொருட்களுக்கும் இலவசமாக நம் கணினியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACK அல்லது KEYGEN.அதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்றால் அதை எல்லாம் தட்டச்சு செய்ய நேரம் கிடையாது. சுருக்கமாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி அதை ஆக்டிவேட் செய்யவேண்டும். அதை ஆக்டிவேட் செய்ய மென்பொருள் தயாரித்த நிறுவணத்திற்க்கு கட்டணம் செலுத்திய உடன் அவர்கள் தரும் ரகசிய எண் தருவார்கள். அதை கொண்டு அந்த மென்பொருளை நாம் உபயோகிக்க முடியும். சரி சரி இதல்லாம் எங்களுக்கு தெரியும் மேட்டருக்க வாப்பா என்பது என்காதில் விழுகிறது. கணினியில் உள்ளது போல நம் ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Play Storeல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம். இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம். (வச்சான்டா ஆப்பு) Read more: http://kricons.blogspot.com/2013/07/how-to-download-paid-android-apps-for.html#ixzz2m6ZPmutZ
கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன. எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.
1. உங்கள் கணனியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணனிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
2. கணனியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணனி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணனியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.
3. FireFox, Chrome, IE என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.
4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.
5. கணனியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.
6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.
7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.
8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணனியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணனியின் வேகம் அதிகரித்தது.
9. கணனியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரஜ்எதிர்ப்பான் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும்.
10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணனிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணனிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.
பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்
பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது
01. START ------> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்
02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.
03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.
Subscribe to:
Comments (Atom)